(UTV|அமெரிக்கா ) – கொரோனா வைரஸ் நோய்த்தொற்று உலகம் முழுவதும் பரவத் தொடங்கியதிலிருந்து இதுவரையிலான காலத்தில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் முதல் முறையாக முகக்கவசம் அணிந்து கொண்டு பொதுவெளிக்கு சென்றுள்ளார்
.அமெரிக்க தலைநகரான வாஷிங்டனிலுள்ள இராணுவ மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டுள்ள இராணுவ வீரர்கள் மற்றும் சுகாதார பணியாளர்களை நலன் விசாரிப்பதற்காக சென்றபோதே டிரம்ப் முதல் முறையாக முகக்கவசம் அணிந்து சென்றுள்ளார்.