கேளிக்கை

UTV திரையில் இன்று ‘கஜினி’

(UTV | கொழும்பு) – சூரியாவின் நடிப்பில் வெளியாகிய ‘கஜினி’ UTV இனது இரவு நேர திரைப்படமாக இன்றைய தினம்(10) இரவு 9 மணிக்கு ஒளிபரப்பப்படவுள்ளது.

நடிகர்கள்: சூர்யா, அஸின், நயன் தாரா, ரியாஸ் கான்
இசை: ஹாரிஸ் ஜெயராஜ்
இயக்கம்: ஏ.ஆர்.முருகதாஸ்

‘குறைந்த கால நினைவிழப்பு’ (Short term Memory Loss) என்ற தன்மையை உடையவராக அறிமுகமாகிறார் சூர்யா. எடுத்த எடுப்பிலேயே கொலை செய்கிறார். மருத்துவக் கலூரி மாணவியான நயன் தாரா, அவரைப் பற்றி ப்ராஜெக்ட் செய்ய ஆசைப்படுகிறார்.

ஆனால், ‘வேண்டாம்’ என கல்லூரிப் பேராசிரியரால் அறிவுறுத்தப்படுகிறார். என்றாலும் சூர்யாவின் பின்னணி குறித்து ஆராய முற்படுகிறார். கொலையை விசாரிக்கும் காவல்துறை அதிகாரி ரியாஸ் கான் இன்னொரு பக்கம் சூர்யாவின் பின்னணியை ஆராய்கிறார்.

இவர்களின் மூலம் சூர்யாவின் முன் கதை நமக்குக் காட்டப்படுகிறது. சூர்யா-அஸின் காதலும், அவரது நினைவிழப்புக்கான காரணமும் தெரிய வருகிறது. நடுவில் சூர்யா கொல்ல நினைக்கும் வில்லன் கோஷ்டியினர் இன்னொரு பக்கம் அவரைத் தேடியலைகின்றனர். முடிச்சுகள் அவிழ்ந்து சூர்யா தன் நோக்கத்தை நிறைவேற்றினாரா என்பது மீதி.

காணத் தவறாதீர்கள் UTV ஊடக

Related posts

டாப்ஸி ரகசிய நிச்சயதார்த்தம்?

நடிகர் சுனில் பிரேம்குமார காலமானார்

அமெரிக்காவில் புகழ்பெற்ற ஹாலிவுட் நட்சத்திர ஜோடி பிரிந்தனர்