உள்நாடு

ரஷ்ய பெண்ணை துன்புறுத்திய சம்பவம் – சந்தேகநபர்கள் விளக்கறியலில்

(UTV|கொழும்பு)- காலி முகத்திடலில் ரஷ்ய நாட்டு பெண் ஒருவர் துன்புறுத்தலுக்கு உள்ளான சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள்  5 பேரும் எதிர்வரும் 13ஆம் திகதி வரை விளக்கறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

கடந்த ஜூலை 4ஆம் திகதி இரவு குறித்த பெண் தனது காதலன் மற்றும் நண்பர்களுடன் காலி முகத்திடலில் இருந்த போது அங்கு வந்த சிலர் அவர்களை துன்புறுத்தி தாக்கியுள்ள நிலையில் குறித்த பெண் அதனை காணொளி பதிவு செய்துள்ளார்.

பின்னர் பொலிஸில் மேற்கொள்ளப்பட்ட முறைப்பாட்டுக்கு அமைய பிரதான சந்தேகநபர் உள்ளிட்ட 5 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டனர்.

Related posts

தொழிற்சங்க பிரதிநிதிகள் இன்று சுகயீன விடுமுறை போராட்டத்தில்

சிறுவர்களுக்காக முதற்தடவையாக தேசிய தரவுத்தளம்

சுவிஸ் தூதரக உள்ளூர் பணியாளருக்கு பிணை [VIDEO]