உள்நாடு

பொதுத் தேர்தல் பிரச்சாரம் குறித்து விசேட அறிவிப்பு

(UTV|கொழும்பு)- 2020 ஆண்டு பொதுத் தேர்தலில் பிரச்சாரம் செய்வதற்கான கட்டுப்பாடுகளை மீறும் நபர்களுக்கு எதிராக 1981ஆம் ஆண்டு பொதுத் தேர்தல் சட்டம், பொலிஸ் கட்டளைச் சட்டம் மற்றும் தனிமைப்படுத்தல் விதிமுறைகளின் கீழ், சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என, பொலிஸ் ஊடகப்பிரிவினால் வெளியிடப்பட்ட ஊடக அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது

இந்த விடயம் தொடர்பில் தேர்தல்கள் ஆணைக்குழுவினால் 18 வழிகாட்டல்கள் வழங்கப்பட்டுள்ளதாகவும், பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

மேலும், பொதுத் தேர்தல் வேட்பாளர்கள் அல்லது அவர்களது குடும்பத்தினர் வீடு வீடாக செல்வதை தவிர்த்துக் கொள்ள வேண்டும் எனவும், அவர்கள் சார்ந்த வேறு நபர்களுக்கு வீடு வீடாக செல்ல முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, பிரச்சார நடவடிக்கைகளுக்காக மூவருக்கு மாத்திரமே அனுமதி வழங்கப்பட்டுள்ளதுடன், காலை 7 மணி முதல் இரவு 8 மணிக்குள் குறித்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் எனவம் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதேவேளை, பொதுத் தேர்தல் பிரச்சார நடவடிக்கைகள், ஓகஸ்ட் மாதம் 2ஆம் திகதி நள்ளிரவு 12 மணியுடன் நிறைவு செய்யப்பட வேண்டும் எனவும் பொலிஸ் ஊடகப்பிரிவு இன்று வெளியிட்டுள்ள விசேட ஊடக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Related posts

வயது 12, மேற்பட்ட சிறுவர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்படும் திகதி அறிவிப்பு

பஸ் கட்டணம் குறைக்கப்படாது

எரிபொருள் விநியோகம் – முக்கிய அறிவிப்பு