(UTV | கொழும்பு) – எதிர்வரும் பாராளுமன்ற பொதுத் தேர்தலில் முன்னாள் எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தி 115 ஆசனங்களைக் கைப்பற்றும் என்று முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சுஜீவ சேனசிங்க தெரிவித்துள்ளார்.
தேர்தலில் வென்ற பின்னர் புதிய யுகத்தை ஏற்படுத்துவோம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
“… சில ஊழல் அரசியல்வாதிகளின் அரசியல் பயணத்துக்காக மக்களில் சிலர் அடிமைகள் போல் செயற்பட்டு இனவாதத்தைத் தூண்டுகின்றனர். எனினும், மக்கள் இனவாதத்தையும் போலித் தேசப்பற்றையும் நிராகரிப்பார்கள். ஒரு தேசமாக செயற்படுவார்கள்.
காடையர்கள், கப்பம் பெறுபவர்கள், அதிகார துஷ்பிரயோகத்தில் ஈடுபடுபவர்களைப் பொதுத்தேர்தலில் இம்முறை மக்கள் நிராகரிக்க வேண்டும். அரசியல்வாதிகளின் கௌரவத்துக்குப் பாதிப்பை ஏற்படுத்துவதற்காகவே ஜனாதிபதி ஆணைக்குழுக்களை உருவாக்கியுள்ளனர்..” எனவும் அவர் தெரிவித்திருந்தார்.