உள்நாடுவிளையாட்டு

மஹேல ஜயவர்தனவிடம் இன்று விசாரணை நடத்தப்படாது

(UTV|கொழும்பு)- இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் அணித்தலைவர் மஹெல ஜயவர்தன விளையாட்டுக் குற்றங்கள் தொடர்பான விசேட விசாரணைப் பிரிவில் இன்று முன்னிலையாக மாட்டார் என குறித்த பிரிவு தெரிவித்துள்ளது.

விளையாட்டுத்துறை குற்றங்களை விசாரிக்கும் குழுவில் இன்று முன்னிலையாகுமாறு இலங்கை கிரிக்கட் அணியின் முன்னாள் வீரர் மஹேல ஜயவர்தனவிற்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், இன்று மஹெல ஜயவர்தன சாட்சியமளிக்க வருகைத்தர மாட்டார் எனவும் எதிர்வரும் நாட்களில் அவரை அழைப்பதாகவும் விசேட விசாரணைப் பிரிவு தெரிவித்துள்ளது.

2011ஆம் ஆண்டு உலகக் கிண்ண கிரிக்கெட் இறுதிப் போட்டி குறித்து வாக்குமூலம் பதிவு செய்யும் வகையிலேயே மஹெல ஜயவர்தன விளையாட்டுக் குற்றங்கள் தொடர்பான விசேட விசாரணைப் பிரிவுக்கு இன்று அழைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts

நாளை (21) கொழும்பின் சில பகுதிகளில் 09 மணி நேர நீர் வெட்டு!

திங்கள் முதல் நகரங்களுக்கு இடையிலான கடுகதி ரயில் சேவைகள்

இன்று மின் வெட்டு அமுலாகாது