(UTV | கொழும்பு) – பாதாள உலகக்குழு உறுப்பினரான கொஸ்கொட தாரகவின் உதவியாளர் என்று கூறப்படும் ‘ககன’ என்ற நபரின் போதைப்பொருள் வியாபாரத்துக்கு ஒத்துழைப்பு வழங்கிய உதவியாளர்கள் இருவர், பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சந்தேக நபர்களிடம் இருந்து அரச உயர் அதிகாரிகள் மற்றும் பல்வேறு நிறுவனங்களில் போலியான முத்திரைகள் 21 மற்றும் கேரளா கஞ்சா, அலைபேசி உள்ளிட்ட பொருள்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் விசேட அதிரடிப்படையினர் தெரிவித்துள்ளனர்.