உள்நாடு

நிதி முறைகேடுகள் குறித்து ஆராய ஆணைக்குழு நியமனம்

(UTV|கொழும்பு)- கடந்த ஆட்சி காலத்தில் அரசு வங்கிகளின் இடம்பெற்ற நிதி முறைகேடுகள் குறித்து ஆராய ஆணைக்குழு ஒன்று அமைக்கப்படவுள்ளதாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

இலங்கை வங்கி சேவையாளர் சங்கத்தினரால் விடுக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைய இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

இலங்கை வங்கியின் ஊழியர் சங்கத்தினர் மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுக்கும் இடையிலான சந்திப்பு ஒன்று நேற்று(26) அலரி மாளிகையில் இடம்பெற்றது.

இதன்போது அரச வங்கிகளில் தற்போது பணியாற்றும் ஊழியர்களின் ஓய்வூதியம் குறித்தும் கலந்துரையாடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

இந்த விடயம் குறித்து ஆராய்ந்ததன் பின்னர் குழுவொன்றை அமைத்து அதனூடாக தீர்வு ஒன்றை வழங்க பிரதமர் தீர்மானித்தாக பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

Related posts

இதுவரையில் 884,164 பேருக்குக் கொரோனா தடுப்பூசி

ஜப்பானில் வேலை வாய்ப்பு!

பொலிசாரின் கட்டளையை மீறி பயணித்த டிப்பர் மீது துப்பாக்கிச் சூடு