உள்நாடு

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் இடியுடன் கூடிய மழை

(UTV|கொழும்பு)- நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக  வளிமண்டவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

மேல், வடமேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் தென்மாகாணங்களில் அவ்வப்போது மழை பெய்யக் கூடும் எனவும் வடக்கு, வடமத்திய மற்றும் ஊவா மாகாணங்களில் குறிப்பாக மாலையில் அல்லது இரவில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் 75 மி.மீ க்கும் அதிகமான ஓரளவு பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.

இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப் பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும். மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள்.

நாட்டைச் சூழவுள்ள ஏனைய கடற்பரப்புகள்அவ்வப்போது ஓரளவு கொந்தளிப்பாகக் காணப்படும்.

கடலில் பயணம் செய்வோரும் மீனவ சமூகமும் இவ்விடயம் தொடர்பாக அவதானமாக இருக்குமாறு வேண்டிக் கொள்ளப்படுகிறீர்கள்.

Related posts

கொழும்பில் மேலும் சில பகுதிகள் தனிமைப்படுத்தல்

“இந்தியா – இலங்கை ஒத்துழைப்புக்கு வானமே எல்லை”

தொலைக்காட்சி ஒளிபரப்பை டிஜிட்டல் மயப்படுத்தும் வேலைத்திட்டம் இன்று