கேளிக்கை

ரீது வர்மா காதல் திருமணம்

(UTV|இந்தியா ) – கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் படத்தின் மிகவும் பிரபலமான ரீது வர்மா காதல் திருமணம் செய்யவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழில் வேலையில்லா பட்டதாரி 2, துருவநட்சத்திரம், கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் உள்ளிட்ட படங்களில் நடித்தவர் நடிகை ரீது வர்மா.

இந்நிலையில் ரீது வர்மா சமீபத்தில் தெலுங்கு ஊடகம் ஒன்றிற்கு சமூகவலைதளம் வாயிலாக பேட்டி அளித்தார்.

இதன்போது, , நான் எப்போது திருமணம் செய்து கொள்ளப் போகிறேன் என எனது பெற்றோர் ஆவலாக காத்திருக்கிறார்கள். ஆனால் நான் அவர்களிடம் இப்போதைக்கு திருமணம் செய்யப் போவதில்லை என தெளிவாக சொல்லிவிட்டேன். எனக்கு ஏற்றவரை எப்போது பார்க்கிறேனோ அப்போது தான் திருமணம். அது நிச்சயம் காதல் திருமணமாக தான் இருக்கும், என பதிலளித்துள்ளார்.

Related posts

தேவ் படத்திற்கு போட்டியாக களத்தில் இறங்கும் பிரபல நடிகர், நடிகையின் படம்!

ராபர்ட் பேட்டின்ஸனுக்கு கொரோனா

மகாத்மா காந்திக்கு ஐஸ் சிலை