உள்நாடு

ஹம்பாந்தோட்டையில் 12 மணித்தியாலங்கள் நீர் வெட்டு

(UTV|ஹம்பாந்தோட்டை )- ஹம்பாந்தோட்டை பல பகுதிகளிலும் நீர் விநியோகம் தடை அமுல்ப்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது.

இதற்கமைய எதிர்வரும் 22 ஆம் திகதி காலை 08 மணி முதல் இரவு 08 மணி வரை 12 மணித்தியாலங்கள் வீரகெட்டிய, வலஸ்முல்ல, மெதமுலன, மருதவெல, பதிகம, முல்கிரிகல மற்றும் ஹொரேவெல ஆகிய பகுதிகளுக்கு இவ்வாறு நீர் வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது

நிலத்தடி நீர் வழங்கும் குழாயில் மேற்கொள்ளப்பவுள்ள திருத்தப்பணிகள் காரணமாகவே இவ்வாறு நீர் விநியோகம் தடை அமுல்ப்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன

Related posts

ஶ்ரீலங்கன் விமான சேவையைக் கொள்வனவு செய்யும் முயற்சியில் தம்பிக்க!

மாவட்ட ரீதியாக நிதி ஒதுக்கீடு என்கிறார் ஜனாதிபதி

UPDATE – மேல் மாகாணம் முழுவதும் மறு அறிவித்தல் வரை பொலிஸ் ஊரடங்கு