விளையாட்டு

இங்கிலாந்து தொடருக்கு கிரிக்கெட் வீரர்கள் குடும்பத்தினரை அழைத்து செல்ல தடை

(UTV|பாகிஸ்தான் ) – இங்கிலாந்து தொடரின் போது பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்கள் தங்களது குடும்பத்தினரை அழைத்து செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

பாகிஸ்தான் கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டெஸ்ட் மற்றும் மூன்று 20 ஓவர் போட்டிகளில் விளையாடவுள்ளது.

இதையடுத்து 29 வீரர்கள் மற்றும் தலைமை பயிற்சியாளர், மருத்துவ அதிகாரி உட்பட 14 உதவியாளர்கள் இந்த மாத இறுதியில் இங்கிலாந்துக்கு செல்லவுள்ளனர். இவர்கள் தங்களது மனைவி, குழந்தைகள் என குடும்ப உறுப்பினர்கள் எவரையும் உடன் அழைத்து செல்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

பாகிஸ்தான் அணியினர் இங்கிலாந்து சென்றடைந்ததும் அங்கு பர்மிங்காம் நகரில் 14 நாட்கள் தனிமைப்படுத்தப்படுவார்கள் எனவும் பின்னர் கொரோனா தடுப்பு பாதுகாப்பு நடைமுறைகளை பின்பற்றி வீரர்கள் 2 வாரம் பயிற்சியில் ஈடுபடுவார்கள் என பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய நிர்வாகிகள்
தெரிவித்துள்ளனர்.

Related posts

சிறந்த ஒருநாள் கிரிக்கெட் வீரருக்கான விருது பாபர் அசாமுக்கு

மெஸ்ஸியும் ரொனால்டோவும் மோதிக்கொள்ளும் கால்பந்தாட்டப்போட்டி இன்று

கிரிகெட் சாதனை பட்டியலில் இடம் பிடித்த கிறிஸ் கெய்ல்!!!