உள்நாடு

அபிவிருத்தியடைந்து வரும் நாடான இலங்கை கொரோனாவில் இருந்து மீண்டுள்ளது

(UTV |  கொழும்பு) – இலங்கையில் முதலாவது கொரோனா வைரஸ் தொற்றாளராக சீன பெண் ஒருவர் அடையாளம் காணப்படுவதற்கு முன்னதாகவே, கொரோனா வைரஸ் பரவலுக்கு எதிரான நடவடிக்கை எடுக்கும் வேலைத்திட்டங்கள் ஜனாதிபதியால் ஆரம்பிக்கப்பட்டதாக பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஓய்வு பெற்ற மேஜர் ஜெனரல் கமல் குணரத்ன தெரிவித்தார்.

அத்துடன், உலகின் அதிக சக்திவாய்ந்த நாடுகள் கொரோனா வைரஸிடம் தலைவணங்கியுள்ள நிலையில், அபிவிருத்தியடைந்து வரும் சிறிய நாடான இலங்கை கொரோனாவின் பிடியில் இருந்து மீண்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

“ஜனவரி 28ஆம் திகதி இலங்கையில் முதலாவது கொரோனா வைரஸ் தொற்றாளர் அதாவது சீன பெண் ஒருவர் அடையாளம் காணப்பட்டார். அதற்கு முன்னதாகவே கொரோனா வைரஸ் பரவலுக்கு எதிரான நடவடிக்கை எடுக்கும் வேலைத்திட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டன. ஒரு மாதத்துக்கு பின்னர் மார்ச் 08ஆம் திகதி முதலாவது இலங்கை பிரஜை தொற்றுக்கு உள்ளானர். இதற்கு 40 நாட்களுக்கு முன்னதாகவே எமது வேலைத்திட்டங்கள் ஆரம்பமாகிவிட்டன.

ஏனைய நாடுகளில் கொரோனா வைரஸ் ஒழிப்பு வேலைத்திட்டத்தில் சுகதார பிரிவினர் ஈடுபடுத்தப்பட்ட நிலையில், இலங்கையில் இராணுவத்தின், சுகாதாரம் மற்றும் நிர்வாக பிரிவினரை இணைத்து செயலணியை உருவாக்க ஜனாதிபதி நடவடிக்கை எடுத்தார். இதன் காரணமாவே விரைவில் கொரோனா வைரஸ் தொற்றை எம்மால் கட்டுப்படுத்த முடிந்தது.

ஏப்ரல் 30ஆம் திகதிக்கு பின்னர் சமூகத்தின் மத்தியில் கொரோனா வைரஸ் தொற்று பரவல் இல்லை, கடற்படையினர் மற்றும் வெளிநாடுகளில் இருந்து வருபவர்கள் மாத்திரமே தொற்றுக்கு உள்ளாகின்றனர்.

கடற்படையினரிடம் தொற்று பரவலை அவதானித்த உடன், விடுமுறையில் உள்ளவர்களை திருப்பியழைத்து பொதுமக்களிடம் பரவுவதை தடுக்க நடவடிக்கை எடுத்தோம்” என்றார்.

ஜே.ஏ.ஜோர்ஜ்

Related posts

டில்ஷி குமாரசிங்க தேசிய சாதனை

துறைமுக அதிகார சபையின் அனைத்து சேவைகளும் அத்தியாவசியமாகின்றது [VIDEO]

விமலவீர திஸாநாயக்க எம்.பி மற்றும் பல உள்ளூராட்சி மன்ற பிரதிநிதிகள் ஜனாதிபதி ரணிலுக்கு ஆதரவு

editor