(UTV|கொழும்பு) – 2020 ஆண்டுக்கான க.பொ.த உயர்தர பரீட்சை நடைபெறும் தினம் தொடர்பிலான இறுதி தீர்மானம் ஜூலை மாதம் 6 ஆம் திகதி பாடசாலை ஆரம்பிக்கப்பட்ட பின்னர் இறுதி அறிவிப்பு வெளியிடப்படும் என்று கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
பாடசாலை ஆரம்பிக்கப்பட்டதன் பின்னர் க.பொ.த உயர்தர பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்களதும், குறித்த வகுப்புக்களில் கற்பிக்கும் ஆசிரியர்கள், ஆசிரிய சங்கத்தினர் மற்றும் அதிபர்களின் ஆலோசனைகளையும் பரிந்துரைகளையும் கல்வி அமைச்சு பெறவுள்ளது.
கொரோனா தொற்று காரணமாக இவ்வருடத்திற்குள் பாடசாலைகள் நடத்தப்பட்ட தினம் குறைவடைந்தமையினால் பாடத்திட்டங்களை நிவரத்தி செய்ய முடியாமல் போனதை அடுத்து உயர்தர பரீட்சை மாணவர்கள் எதிர்கொள்ளும் சவாலை கருத்திற் கொண்டு உயர்தர பரீட்சையை ஒத்திவைக்குமாறு பல்வேறு தரப்பினர்களினால் கல்வி அமைச்சர் மற்றும் கல்வி அமைச்சிற்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.