கேளிக்கை

சானியாவுடன் டென்னிஸ் விளையாடாமல் சென்ற சுஷாந்த்

(UTV|இந்தியா)- பாலிவுட் நடிகரான சுஷாந்த் சிங் ராஜ்புட் மறைவிற்கு டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா சமூக வலைதளத்தில் இரங்கல் தெரிவித்துள்ளார்.

34 வயதாகும் பாலிவுட் நடிகரான சுஷாந்த் சிங் ராஜ்புட், மும்பையில் உள்ள தனது வீட்டில் நேற்று தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

சுஷாந்தின் திடீர் மறைவுக்கு பிரபலங்கள் பலரும் டுவிட்டர் உள்ளிட்ட சமூக வலைத்தளங்கள் மூலம் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா, சுஷாந்த் குறித்து டுவிட்டரில் பதிவிட்டுள்ளதாவது:
“சுஷாந்த் மனம் உடைந்துவிட்டது. ஒரு நாள் நீயும் நானும் சேர்ந்து டென்னிஸ் விளையாடலாம் என கூறினாய். எப்போதும் சிரிப்புடன் இருக்கும் நபர் நீ. செல்லும் இடமெல்லாம் அனைவருக்கும் சந்தோசத்தை பரப்பினாய். ஆனால் நீ இவ்வளவு வலியுடன் இருந்தாய் என்பது எங்களுக்கு தெரியாமல் போய்விட்டது. இந்த உலகம் உன்னை நிச்சயம் மிஸ் பண்ணும் என் நண்பரே.” என உருக்கமாக பதிவிட்டுள்ளார்.

Related posts

செல்வராகவனின் மரண மொக்கை ஓடிடியில்

காதல் வலையில் சிக்கிய ஆர்யா

பிரபல திரைப்பட நடிகர் கிரிஷ் கர்னாட் மரணம்