உலகம்

கொரோனா எதிரொலி : சிலி நாட்டின் புதிய சுகாதார அமைச்சராக என்ரீக் பாரீஸ்

(UTV | சிலி) – கொரோனா தொற்றினது தாக்கம் சிலி நாட்டில் அதிகரித்துவரும் நிலையில் அந்நாட்டினது சுகாதார அமைச்சர் ஜெய்மி மனாலிக் தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார்.

சிலியில் புதிதாக வைரஸ் தொற்றால் பாதிப்படைவோரின் எண்ணிக்கையும் உயிரிழப்பும் நாளுக்கு நாள் அதிகரித்துச் செல்கின்ற நிலையில், அந்நாட்டினது சுகாதார அமைச்சர் உரிய நடவடிக்கைகளை முன்னெடுக்காமையே இதற்கு காரணம் என எதிர்க்கட்சிகள் தொடர்ந்தும் குற்றம் சாட்டியிருந்தன.

இதனையடுத்தே தனது பதவியில் இருந்து சுகாதார அமைச்சர் ஜெய்மி மனாலிக் திடீரென இராஜினாமா செய்துள்ளதுடன் அவர் தனது இராஜினாமா கடிதத்தை அந்நாட்டின் ஜனாதிபதி செபஸ்டியன் பினேராவிடம் கையளித்துள்ளார்.

அவரது இராஜினாமாக் கடிதத்தினை ஏற்றுக்கொண்ட ஜனாதிபதி
புதிய சுகாதார அமைச்சராக என்ரீக் பாரீஸ் (Enric paris) என்பவரை நியமித்துள்ளார்.

Related posts

அமெரிக்காவில் தொடர்ந்தும் அதிகரிக்கும் கொரோனா மரணங்கள்

மலேசியாவின் புதிய பிரதமராக முஹைதீன் யாசின் நியமனம்

இந்திய வீரர்களை இன ரீதியாக ஒதுக்கியதற்கு மன்னிக்கவும்