விளையாட்டு

கோஹ்லி போன்றதொரு வீரர் கிடைப்பது அதிசயமே

(UTV | கொழும்பு) – ஸ்ரீமத் டொன் பெட்மன்கனிற்கு பின்னர் இதுவரையில் உலகில் தோன்றிய சிறந்த துடுப்பாட்டக்காரராக இந்திய அணியின் தலைவர் விராட் கோஹ்லியைக் கூறலாம் என இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் குமார் சங்கக்கார தெரிவித்துள்ளார்.

இந்தியா தொலைக்காட்சி ஒன்றுடனான கலந்தரையாடல் ஒன்றிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

“விராட் கோஹ்லி என்பவர் எந்த வகையிலும் சிறந்ததொரு வீரர் என்பது எனது உணர்வு. அவரது அர்ப்பணிப்புகள் எச்சந்தர்ப்பத்திலும் அதி விசேடமானது எனலாம். அதனை நான் கண்டும் அறிந்தும் இருக்கிறேன்..”

அவ்வாறே, விளையாட்டு மைதானத்திலும் சரி வெளியிலும் சரி அவரது மனநிலை மற்றும் அவரது உறுதியான நிலைப்பாட்டினை நான் அவதானித்துள்ளேன். அந்த வகையில் அனைத்து வீரர்களையும் விட அவர் முன்னிலையில் உள்ளார் என்றே கூற வேண்டும். இதன் காரணமாக ஸ்ரீமத் டொன் பெட்மன்கனிற்கு பின்னர் இவர் ஒரு சிறந்த வீரர் என நியமிக்கப்பட கோஹ்லிக்கு பாரியளவிலான திறமை உள்ளது..” எனலாம்.

தொடர்ந்தும் அவர் இது தொடர்பில் தெரிவிக்கையில் கோஹ்லி போன்றதொரு வீரர் கிரிக்கெட் விளையாட்டில் உதயமாவது மிகவும் கடினம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

“அவர் மிகவும் அற்பமாக உலகில் உதித்த ஒரு வீரர் என்று கூறலாம். எந்தவொரு விளையாட்டிலும் மிகவும் உற்சாகமுள்ள உருதுனைமிக்க ஒரு வீரராகவே நான் கோஹ்லியினை காண்கிறேன். மேலும் விளையாட்டின் போது அவரது முயற்சிகளும் அர்ப்பணிப்புகளும் அளப்பரியது எனலாம்.. அதனை நான் மெச்சுகிறேன்…”

“.. அவ்வாறே அணியின் தலைமையிலும் சரி அவர் அணிக்காக எதையும் சாதிக்கக்கூடிய மன நிலையில் இருக்கும் ஒரு தலைவர் எனலாம். அவரது தலைமையிலான அணி என்றாலே ஒரு தனி பெருமிதம் தான்.. எல்லா போட்டியையும் வெற்றி வரையில் கொண்டு செல்ல அவர் எடுக்கும் ஒவ்வொரு முயற்சிகளும் விசேடமானது.

அவ்வாறே துடுப்பாட்டத்திலும் அவர் பழைய விளையாட்டு அணுகுமுறையினை கையாண்டு அதனை புதுவித ஸ்டைல் இல் முயற்சிப்பவர். அதனால் அவரது துடுப்பாட்டம் எதிரணிக்கு சவாலாக அமைகிறது..” எனவும் தெரிவித்துள்ளார்.

Related posts

இலங்கை கிரிக்கெட் அணியில் மூவருக்கு கொரோனா

இலங்கைக்கு எதிராக மோதவுள்ள ஆஸி. குழாம் அறிவிப்பு

உலகக்கிண்ணத்தை கைப்பற்றியது அவுஸ்திரேலியா [PHOTOS]