உள்நாடு

வாக்குச் சீட்டு அச்சிடும் பணிகள் 50 வீதம் நிறைவு

(UTV|கொழும்பு)- பொதுத் தேர்தலுக்கான வாக்குச் சீட்டுகள் அச்சிடும் பணிகள் 50 வீதம் நிறைவடைந்துள்ளதாக அரச அச்சகம் தெரிவித்துள்ளது.

இதன்படி 10 மாவட்டங்களுக்கான வாக்குச்சீட்டுகள் அச்சிடும் பணிகள் தற்போது நிறைவடைந்துள்ளதாக அரச அச்சகம் தெரிவித்துள்ளது.

அனுராதபுரம் மற்றும் பொலன்னறுவை மாவட்டங்களுக்கான வாக்குச் சீட்டுகள், அச்சிடப்பட்டு தேர்தல்கள் ஆணைக்குழுவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் ஏனைய மாவட்டங்களுக்கான வாக்குச் சீட்டுகள் எதிர்வரும் நாட்களில் அச்சிடப்படும் எனவும் அரச அச்சகர் கங்கா கல்பனி லியனகே குறிப்பிட்டுள்ளார்.

மேலும், இம்முறை பொதுத் தேர்தலுக்காக ஒரு கோடியே 70 இலட்சம் வாக்குச் சீட்டுகள் அச்சிடப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

Related posts

கட்டுநாயக்க விமான நிலையத்தில் இன்று முதல் PCR பரிசோதனை

மத்திய வங்கியின் கொள்கை வட்டி வீதம் அதிகரிப்பு

தபால் மூல வாக்களிப்பு – 5ஆம் கட்ட வாக்குப்பதிவு இன்று