உள்நாடு

தேசிய தொழிற்தகைமை பாடநெறியிற்கு விண்ணப்பம் கோரப்பட்டுள்ளது

(UTV | கொழும்பு) – உயர்தரத்தின் தேசிய தொழிற்தகைமை பாடநெறியிற்கு மாணவர்களை உள்ளீர்ப்பதற்கான விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளபடுவதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

சாதாரணதரப் பரீட்சையில் சித்தியடையாத மாணவர்களும் இதன்மூலம் நன்மையடைய முடியும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

நாடளாவிய ரீதியில் அனைத்து வலயக்கல்விப் பணிமனைகளை உள்ளடக்கும் வகையில் 423 பாடசாலைகளில் தரம் 12 இற்கு மாணவர்கள் உள்ளீர்க்கப்படவுள்ளனர்.

இது குறித்த மேலதிக தகவல்களை 011 22787136 அல்லது 011 2786746 ஆகிய தொலைபேசி இலக்கங்களுக்கு அழைத்து பெற்றுக் கொள்ள முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனைத்தவிர www.moe.gov.lk எனும் கல்வி அமைச்சின் இணையத்தள முகவரிக்கு பிரவேசித்தும் தகவல்களை பெற்றுக் கொள்ள முடியும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

Related posts

திறந்த பாராளுமன்ற எண்ணக்கருவை வலுப்படுத்தி, பொறுப்புக்கூறலுடன் மக்கள் பிரதிநிதித்துவ பணியை வினைதிறனாக முன்னெடுக்க வேண்டும் – எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச

editor

தங்கம் பவுன் ஒன்றுக்கான விலை ரூ.140,000 தாண்டியது

SLPP இனது அனைத்து நிகழ்வுகளும் நிறுத்தம்