உள்நாடு

பல்கலைக்கழகங்களை ஆரம்பிப்பது தொடர்பில் இறுதித் தீர்மானம் இன்று

(UTV|கொழும்பு)- பல்கலைக்கழக கல்வி நடவடிக்கைகளை மீண்டும் ஆரம்பிப்பது தொடர்பிலான இறுதித் தீர்மானம் இன்று(13) வௌியிடப்படும் என பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இந்த விடயம் குறித்து அனைத்து துணை வேந்தர்களையும் அழைத்து கலந்துரையாடியதாக ஆணைக்குழு தலைவர் பேராசிரியர் சம்பத் அமரதுங்க குறிப்பிட்டுள்ளார்.

பல்கலைக்கழகங்களை மீளவும் ஆரம்பிப்பது தொடர்பிலான ஆலோசனைகள் சுகாதார அமைச்சிடம் இருந்து கிடைக்கப்பெற்றுள்ள நிலையிலேயே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பேராசிரியர் சம்பத் அமரதுங்க மேலும் குறிப்பிட்டுள்ளார்.

இந்த நிலையில் பல்கலைக்கழகங்களின் மருத்துவபீட இறுதி ஆண்டு பரீட்சைகளை எதிர்வரும் 15 ஆம் திகதி ஆரம்பிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் சம்பத் அமரதுங்க தெரிவித்துள்ளார்.

Related posts

“இது நிவாரணங்களை வழங்கக் கூடிய நேரமல்ல”

உதயங்க வீரதுங்க, கபில சந்திரசேன மீது அமெரிக்கா விதித்த தடை

editor

உரத்தின் விலை குறைகிறது : விவசாய அமைச்சர்