புகைப்படங்கள்

20 ஆயிரம் டன் எண்ணெய் கலந்ததால் சிவப்பாக மாறிய ஆறு

(UTV|ரஷ்யா)- ரஷ்யாவில் எண்ணெய் சுத்திகரிக்கும் நிலையத்தில் இருந்து 20 ஆயிரம் டன் எண்ணெய் கசிந்து ஆற்றில் கலந்ததால் பல மைல் தூரத்திற்கு ஆற்றுத் தண்ணீர் சிவப்பாக காட்சி அளிக்கிறது.

ரஷ்யாவின் சிபேரியன் நகரத்தின் வடக்குப் பகுதி நோரில்ஸ்க் என்ற இடத்தில் மின் நிலையம் ஒன்று செயல்பட்டு வருகிறது. இங்கு டீசலை சேமித்து வைக்கும் மிகப்பெரிய டேங்க் திடீரென இடிந்து விழுந்துள்ளதனால் டீசல் பெருக்கெடுத்து ஓடி அருகில் உள்ள அம்பர்னாயா ஆற்றில் கலந்தது.

உடனே அந்த மாநிலத்தில் அவசர நிலையை பிரகடனபடுத்தியுள்ளார் அதிபர் புதின்.

சுமார் 20 ஆயிரம் டன் டீசல் வெளியேறியதாக கூறப்படுகிறது.

ஆற்றை சுத்தப்படுத்த 1.16 பில்லியன் பவுண்டு செலவாகும் என சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கவலைத் தெரிவித்துள்ளனர்.

         

       

      

 

Related posts

அவுஸ்திரேலியாவில் சிக்கியிருந்த இலங்கையர்கள் நாடு திரும்பினர்

இயற்கையின் கோரப்பிடியில் தவிக்கும் உயிரினங்கள்

அமைச்சர் ரிஷாட்டின் கல்முனை விஜயம்!