(UTV|இத்தாலி )- இன்று (03) முதல் ஐரோப்பிய நாடுகளின் சுற்றுலாப் பயணிகள் நாட்டுக்குள் வருவதற்கு இத்தாலி அனுமதியளித்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
உள்ளூர் பிராந்தியங்களுக்கு இடையிலான போக்குவரத்துக்கு விதிக்கப்பட்டிருந்த தடையும் தளர்த்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன
ஐரோப்பாவில் முடக்கல் கட்டுப்பாடுகள் தளர்த்தப்படும் நிலையில், இத்தாலி இந் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, இத்தாலியில் கொரோனா வைரஸ் தொற்றினால் 233,515 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன், 33,530 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.