உலகம்

ரஷ்யாவின் மொஸ்கோ நகர முடக்கம் தளர்த்தப்பட்டது

(UTV | ரஷ்யா) – ரஷ்யாவின் மொஸ்கோ நகரத்தில் கொரோனா வைரஸ் தாக்கம் குறைவடைந்து வரும் நிலையில் முடக்கச் செயற்பாடுகள் தளர்த்தியுள்ளது.

இருப்பினும் கொரோனா தொற்று காரணமாக பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை தொடர்ந்தும் அதிகரித்து வருகின்றது.

இந்நிலையில், இதுவரையில் ரஷ்யாவில் கொரோனா தொற்றாளர்கள் 414,878 பேர் பதிவாகியுள்ள நிலையில் 4,855 பேர் இதுவரை உயிரிழந்துள்ளனர்.

இதனைத்தொடர்ந்து முடக்கச்செயற்பாடுகளை தளர்த்துவது சிறந்தது அல்ல என்று ரஷ்ய சுகாதாரத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

ஈரானுக்கு எதிராக பொருளாதார தடை – ட்ரம்ப்

ஜி-20 மாநாட்டினை புறக்கணித்த ரஷ்ய ஜனாதிபதி

சீனாவில் ஏற்பட்ட காட்டுத் தீயில் சிக்கி 19 பேர் பலி