விளையாட்டு

சுமார் 81 நாட்களின் பின்னர் பயற்சி போட்டிகள் நாளை ஆரம்பம்

(UTV – கொழும்பு) – கொவிட் 19 தொற்று நோய் நிலைமை காரணமாக சுமார் இரண்டரை மாத காலமாக, அதாவது.81 நாட்கள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த தேசிய அணியின் கிரிக்கெட் நடவடிக்கைகளை சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் சட்ட திட்டங்களுக்கு அமைய நாளை (01) முதல் மீண்டும் ஆரம்பிக்க இலங்கை கிரிக்கெட் நிறுவனம் நடவடிக்கை எடுத்துள்ளது.

இலங்கை கிரிக்கெட் அணியின் பிரதான பயிற்சியாளர் மிக்கி ஆதர் உள்ளிட்ட தேசிய அணியின் பயிற்சியாளர்கள் நால்வரின் கன்காணிப்பின் கீழ் இடம்பெறவுள்ள முதலாவது பயிற்சி திட்டம் 12 நாட்கள் தங்கியிருந்து பயிற்சி வழங்கப்படும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளது.

குறித்த பயிற்சி திட்டத்திற்கு 13 வீரர்கள் பங்கேற்கவுள்ளனர். அதன்படி வேகப்பந்து விச்சாளர்கள் 06 பேரும் சுழற்பந்து விச்சாளர்கள் 03 பேரும், துடுப்பாட்ட வீரர்கள் 02 பேரும் ஆரம்ப கட்டமாக அழைக்கப்பட்டிருந்தாலும் பின்னர் மேலும் 02 வீரர்களை அழைக்க பயற்சிக்குழு தீர்மானித்ததாக இலங்கை கிரிக்கெட் தெரிவுக் குழுவின் தலைவர் அசந்தா டி மெல் தெரிவித்திருந்தார்.

முதல் பயிற்சிக்காக உள்வாங்கப்பட்டுள்ள வீரர்கள்:
சுரங்கா லக்மால், நுவான் பிரதீப், லஹிரு குமார, விஷ்வ பெர்னாண்டோ, இசுரு உதான, கசுன் ரஜித, லக்ஷன் சந்தகன், வனிந்து ஹசரங்க, லசித் எம்புல்தெனிய, தனுஷ்க குணதிலக, குசல் பெரேரா

மொழிபெயர்ப்பு : ஆர்.ரிஷ்மா

Related posts

மஹேலவுக்கு இலங்கை கிரிக்கெட் அணியின் ஆலோசகர் பதவி

நாணய சுழற்சியில் இந்தியா வெற்றி

ICC ஒருநாள் கிரிக்கெட் தரவரிசை : முதலிடம் பிடித்த வீரர்