(UTV | கொழும்பு) -குருநாகல் – மாவத்தகம பகுதியில் வெட்டுக்கிளிகளின் பரவல் காரணமாக பயிர்கள் சேதமடைந்துள்ளன.
இதன் காரணமாக சோளம், வாழை, கொய்யா மற்றும் மா உள்ளிட்டவை சேதமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகினறது.
கிருமிநாசினி பயன்படுத்தி வெட்டுக்கிளிகளை அழிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக விவசாய திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் கலாநிதி வீரகோன் தெரிவித்துள்ளார்.