உள்நாடுசூடான செய்திகள் 1

நாடு முழுவதும் ஊரடங்கு நீக்கம் தொடர்பான அறிவித்தல் [RELEASE]

(UTV | கொழும்பு) -தற்பொழுது அமுல்படுத்தப்பட்டுள்ள பொலிஸ் ஊரடங்குச் சட்டம்  காலை 4.00 மணிக்கு நீக்கப்படும் என ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

பல நாட்களுக்கு பின்னர் கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டங்களுக்கான  ஊரடங்குச் சட்டம் நாளை (26) காலை தளர்த்தப்படவுள்ளது.

இது தொடர்பாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு வௌியிட்டுள்ள அறிக்கையில்,

“நாளை, 26ஆம் திகதி, செவ்வாய் முதல் நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் ஊரடங்குச் சட்டம் மறு அறிவித்தல் வரை தினமும் இரவு 10.00 மணி முதல் அதிகாலை 4.00 மணி வரை மட்டுமே அமுல்படுத்தப்படும்.

ஊரடங்கு சட்டம் தளர்த்தப்பட்ட போதும்  தொழிற்சாலைகள், நிறுவனங்கள், அலுவலகங்கள் மற்றும் விற்பனை நிலையங்களில் பணிகளை மேற்கொள்ளும் போதும், பயணிகள் போக்குவரத்தின் போதும் கொரோனா நோய்த்தொற்றை கட்டுப்படுத்துவதற்காக சுகாதார அதிகாரிகளால் பரிந்துரைக்கப்பட்டுள்ள நடைமுறைகளை முழுமையாக பின்பற்ற வேண்டும்.

நோய்த்தொற்று நீக்குதல், முகக்கவசங்களை அணிதல், அடிக்கடி கைகளை கழுவுதல் மற்றும் சமூக இடைவெளியை பேணுதல் இவற்றில் அடங்கும்.

அரச, தனியார் துறை நிறுவனங்களில் சேவைக்கு அழைக்கப்படும் ஊழியர் எண்ணிக்கை மற்றும் யாரை சேவைக்கு அழைப்பது என்பதை அந்த நிறுவனங்கள் வழங்கும் சேவைகள் மற்றும் சுகாதார வழிகாட்டல்களை அடிப்படையாக கொண்டு தீர்மானிக்கும் அதிகாரம் குறித்த நிறுவனங்களின் தலைவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.

நாளை, மே 26, செவ்வாய் முதல் கொழும்பு மற்றும் கம்பஹா தவிர்ந்த ஏனைய மாவட்டங்களுக்கு இடையிலான போக்குவரத்திற்கு அனுமதியளிக்கப்படும்.”

 

Related posts

கைதினை தடுக்க ரவி கருணாநாயக ரீட் மனு தாக்கல்

கொள்ளுபிட்டி சந்தை வளாக அபிவிருத்தி திட்டம்

தற்போதைய அரசாங்கம் மக்கள் ஆணையை புறக்கணித்து, ரணில் முன்னெடுத்த IMF இணக்கப்பாட்டையே முன்னெடுத்து வருகிறது – எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச

editor