(UTV | கொழும்பு) – பாடசாலைகளை மீள ஆரம்பிப்பது தொடர்பில் நாளை மறுதினம் 26 ஆம் திகதி செவ்வாய்கிழமை விசேட கலந்துரையாடல் இடம்பெறவுள்ளது.
இந்த கலந்துரையாடல்கள் அமைச்சர் டலஸ் அழகப் பெரும தலைமையில் கல்வி அமைச்சில் இடம்பெறவுள்ளது.
இதில், சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அனில் ஜாசிங்க தலைமையிலான சுகாதாரத்துறை அதிகாரிகள் மற்றும் கல்வி அமைச்சின் அதிகாரிகள் ஆகியோருக்கிடையே குறித்த கலந்துரையாடல் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந்த கலந்துரையாடல்களின் போது பாடசாலைகளை மீள ஆரம்பிப்பதற்கு முன்னர் செய்து கொடுக்கப்பட வேண்டிய வசதிகள் குறித்து விசேட கவனம் செலுத்தப்படவுள்ளது.