(UTV|கொழும்பு)- கொரோனா தொற்றுக்குள்ளாகி சிகிச்சை பெற்றுவந்த மேலும் 14 பேர் குணமடைந்து வைத்தியசாலைகளில் இருந்து இன்று(24) வெளியேறியுள்ளனர்.
இதன்படி, நாட்டில் கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 674 ஆக அதிகரித்துள்ளது.
இதேவேளை, இதுவரை கொரோனா தொற்றுக்குள்ளான 407 பேர் தொடர்ந்தும் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதன் அடிப்படையில், நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் மொத்த எண்ணிக்கை 1090 ஆக காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது