உள்நாடு

கடந்த 24 மணித்தியாலத்தில் 541 பேர் கைது

(UTV|கொழும்பு)- நேற்று(22) காலை 6 மணி முதல் இன்று(23) காலை 6 மணிவரையான 24 மணிநேர காலப்பகுதியில் ஊரடங்கு சட்டத்தை மீறியமை குற்றச்சாட்டில் மேலும் 541 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

இதன்போது, மேலும் 138 வாகனங்கள் பொலிஸாரின் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

இந்த நிலையில் கடந்த மார்ச் மாதம் 20 ஆம் முதல் ஊரடங்கு சட்டத்தை மீறி செயற்பட்டமை தொடர்பில் 62,162 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அத்துடன் இதுவரையான காலப்பகுதியில் 17,460 வாகனங்கள் பொலிஸாரின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் ஊடகப்பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இதேவேளை கைது செய்யப்பட்டவர்களுள் 18 ,992 பேருக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளதுடன் 7,387 பேருக்கு தண்டனை வழங்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் தலைமையகம் சுட்டிக்காட்டியுள்ளது.

Related posts

பருத்தித்துறைமுனையில் சீன அதிகா

அரச தாதியர் சங்க பணிப்புறக்கணிப்பு நிறைவுக்கு

சனத் நிஷாந்தவின் வீடு எரிப்பு சம்பவம் : சந்தேக நபர்கள் விடுதலை!