(UTV | கொழும்பு) – சீரற்ற காலநிலையால் அக்கரபத்தனை பிரதேச சபைக்குட்பட்ட பகுதியில் 42 குடும்பங்களைச் சேர்ந்த 162 பேர் இடம்பெயர்ந்துள்ளனர்.
இவர்களுக்கு தேவையான உணவு உட்பட அத்தியாவசிய தேவைகளை பூர்த்தி செய்வதற்கான நடவடிக்கையை பிரதேச சபை முன்னெடுத்துள்ளது எனவும் தவிசாளர் எஸ். கதிர்ச்செல்வன் தெரிவித்தார்.
மேலும், லிந்துலை எகமுதுகம பகுதியில் 14 குடும்பங்களைச் சேர்ந்த 56 பேரும், ராணிவக்த பகுதியில் 3 குடும்பங்களைச் சேர்ந்த 21 பேரும், பேர்ஹம் தோட்ட பகுதியில் 25 குடும்பங்களைச் சேர்ந்த 85 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இவர்கள் அந்தந்த தோட்டங்களில் உள்ள பாதுகாப்பான இடங்களில் சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றி தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
இதேவேளை, எகமுதுகம பகுதியில் வீடொன்றின் மீது பாரிய மண்மேடொன்று சரிந்து விழுந்த போதிலும் அதில் தங்கியிருந்த 9 பேரும் மயிர் இழையில் உயிர்தப்பியுள்ளனர்.
நாட்டில் தொடரும் சீரற்ற காலநிலையால் மலையக பகுதிகளில் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.