உள்நாடு

‘அம்பன்’ சூறாவளி வட கிழக்காக நகர்கிறது

(UTV – கொழும்பு) – நாட்டின் பல பகுதிகளில் 100 மில்லிமீற்றர் வரையிலான கடும் மழை வீழ்ச்சி இன்று (20) பதிவாகக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

நுவரெலியா, இரத்தினபுரி, கேகாலை, களுத்துறை, காலி மற்றும் மாத்தறை ஆகிய மாவட்டங்களில் இன்று 100 மில்லிமீற்றர் வரையிலான கடும் மழை வீழ்ச்சி பதிவாகக்கூடும் என குறித்த திணைக்களம் கூறியுள்ளது.

இதேவேளை, வங்காள விரிகுடாவில் நிலைகொண்டுள்ள அம்பன் சூறாவளி வட கிழக்காக நாட்டைவிட்டு நகர்ந்து செல்வதுடன் பிற்பகலில் பங்களாதேஷின் மேற்கு கரையை கடக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

Related posts

தற்போதைய அரசாங்கத்திற்கு எதிராக வாக்களிக்க இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் முடிவு

தேயிலை தோட்டத்தில் 17 வயது யுவதியின் சடலம்: சகோதரரின் கனவர் தப்பியோட்டம்

கடந்த 24 மணிநேரத்தில் 71பேர் கைது