உள்நாடு

ஊரடங்கை சட்டத்தை மீறிய 730 பேர் கைது

(UTV|கொழும்பு)- நேற்று(18) காலை 6 மணி முதல் இன்று(19) காலை 6 மணிவரையிலான 24 மணித்தியால காலப்பகுதியில் ஊரடங்கு சட்டத்தை மீறிய குற்றச்சாட்டில் 730 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.

அத்துடன், குறித்த காலப்பகுதியில் 252 வாகனங்களும் பொலிஸாரினால் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

இதேவேளை, கடந்த மார்ச் மாதம் 20 ஆம் திகதி முதல் 59 ஆயிரத்து 765 பேர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், 16 ஆயிரத்து 668 வாகனங்களும் இதுவரை பொலிஸாரினால் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

மேலும், கைது செய்யப்பட்டவர்களில் 16 ஆயிரத்து 488 பேருக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளதோடு, 6,000 பேருக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.

Related posts

சனல் 4 ஊடகம் உண்மையை வெளிப்படுத்துமா – ரொஹான் குணரத்ன!

எதிர்கட்சி பக்கத்தில் 41 சுயாதீன நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் ஆசனம்

கொழும்பில் 16 மணித்தியல நீர் வெட்டு !