உலகம்

வழமைக்கு திரும்பும் அவுஸ்திரேலியா

(UTV|கொழும்பு)- அவுஸ்திரேலியாவின் நியூ செளத்வேல்ஸ் மாகாணத்தில் இன்று முதல் உணவு விடுதிகள் மற்றும் களியாட்டவிடுதிகள் ஆகியவை திறக்கப்பட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

அவுஸ்திரேலியாவின் மற்ற நகரங்களில் இதுவரையிலும் கட்டுப்பாடுகள் நீடித்து வரும் நிலையில், அந்நாட்டின் அதிக மக்கள்தொகை கொண்ட நகரான சிட்னியில் உணவு விடுதிகள் சில கட்டுப்பாடுகளுடன் திறப்பதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளன.

கொரோனா வைரஸ் தொற்றுக்கு எதிரான போராட்டத்தில் உலக அளவில் சிறப்பாக செயல்படும் நாடுகளில் அவுஸ்திரேலியாவும் ஒன்றாக கருதப்படுகிறது.

இதுவரை அவுஸ்திரேலியாவில் கொரோன வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 7,019 ஆக பதிவாகியுள்ளதுடன், 98 பேர் உயிரிழந்துள்ளனர்.

Related posts

தமிழக முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் பதவியேற்பு

ஈரான் மற்றும் ஈராக்கில் அமெரிக்க விமானங்கள் பறக்கத் தடை

IS என்ற நபர்களை போலியாக காட்ட முனைந்த மற்றுமொரு சதி அம்பலம்!