உள்நாடுசூடான செய்திகள் 1

அனைத்து பிரஜைகளுக்கும் புதிய அடையாள அட்டை விரைவில்

(UTV|கொழும்பு) – அனைத்து பிரஜைகளினதும் தனிப்பட்ட தகவல்களை வாழ்நாளில் ஒரே முறை பெற்றுக்கொண்டு வழங்கப்படவுள்ள தனித்துவமான டிஜிட்டல் அடையாள அட்டைகளின் தற்போதைய நிலை குறித்து ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ ஆராய்ந்துள்ளார்,

புதிய அடையாள அட்டையின் மூலம் தனிப்பட்ட தகவல்களை பௌதீக ரீதியாகவும் இணையத்திலும் பார்க்க முடியும் எனவும் அத்துடன் துல்லியமான தரவுகளுடன் கூடிய புதிய அடையாள அட்டைகள் பல்வேறு சட்டங்களின் கீழ் நிர்வகிக்கப்படும் திணைக்களங்கள் மற்றும் நிறுவனங்கள் எதிர்பார்க்கும் தகவல்களை கொண்டிருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது,

விமானப் பயணங்கள், சாரதி அனுமதி பத்திரங்களை பெற்றுக்கொள்ளல், ஓய்வூதியம், சமூர்த்தி கொடுப்பனவு, வருமான வரி மற்றும் வாக்களிப்பு உள்ளிட்ட பல்வேறு சந்தர்ப்பங்களில் சமர்ப்பிக்கப்படக் கூடிய தகவல்கள் அதில் அடங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது,

இந்த புதிய அடையாள அட்டையைத் தயாரிக்கும் பணிகள் நிபுணர் குழுவொன்றின் கீழ் தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தின் முழுமையான வழிகாட்டலில் ஜனாதிபதி செயலணியின் மேற்பார்வையில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

மேலும், அனைத்து பிரஜைகளுக்கும் புதிய அடையாள அட்டைகளை மிக விரைவில் பெற்றுக்கொள்ளக் கூடிய வகையில் நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பணிப்புரை விடுத்துள்ளார். .

Related posts

நுவரேலியா– ஹக்கல பூங்கா வளாகத்தில் ஆர்ப்பாட்டம்

வாகன நெரிசலை கட்டுப்படுத்த விசேட செயற்திட்டம்

 இன்று முதல் மின் கட்டணம் உயர்வு