(UTV | கொழும்பு) – குணசிங்கபுர பகுதியிலிருந்து அழைத்துச் செல்லப்பட்ட 60 யாசகர்களுக்கு புனர்வாழ்வளிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
குறித்த யாசகர்கள் தற்போது முல்லைத்தீவு கண்காணிப்பு முகாமில் தங்கவைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
இந்த யாசகர்களில் பெரும்பாலானோர் போதைப்பொருளுக்கு அடிமையாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
யாசகம் பெற்றுக்கொள்ளும் பணத்திலிருந்து இவர்கள் போதைப்பொருட்களை கொள்வனவு செய்கின்றமை ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
60 யாசகர்களையும் புனர்வாழ்வளிப்பதற்காக யாழ் நீதவானிடம் இன்று (10) அனுமதி பெறுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
நீதவானின் அனுமதியின் பின்னர், குறித்த யாசகர்கள் வெலிகந்த பகுதியிலுள்ள புனர்வாழ்வளிப்பு நிலையத்தில் அனுமதிக்கப்படவுள்ளனர்.