உலகம்

பிரான்சில் திங்கள் முதல் ஊரடங்கை தளர்த்த தீர்மானம்

(UTV கொழும்பு)- கொரோனா பாதிப்பு மற்றும் உயிரிழப்பு விகிதம் குறைந்துள்ள நிலையில், பிரான்ஸ் நாட்டில் எதிர்வரும் திங்கட்கிழமை ஊரடங்கு சட்டத்தை விலக்கவுள்ளதாக அந்நாட்டு பிரதமர் எட்வர்ட் பிலிப் தெரிவித்துள்ளார்.

பாரிஸ் நகரில் கொரோனா தொற்று அதிகரித்துள்ளதால் அங்கு கடுமையான கட்டுப்பாடுகள் தொடரும் என பிரதமர் எட்வர்ட் பிலிப் கூறியுள்ளார்.

பிரான்ஸ் நாட்டில் மொத்தம் 174,791 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், இதுவரை 25,987 பேர் உயிரிழந்துள்ளனர்.

கொரோனா பாதிப்பின் அடிப்படையில் பிரான்ஸ் நாடு சிவப்பு மற்றும் பச்சை ஆகிய இரண்டு மண்டலங்களாக பிரிக்கப்பட்டிருப்பதாகவும், அதற்கு ஏற்ப கட்டுப்பாடுகள் விதிக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

Related posts

‘உக்ரைனில் இருந்து ரஷியா வரும் மக்களுக்கு நிதியுதவி’

அமெரிக்காவில் 45 இலட்சத்தை நெருங்கும் கொவிட்-19 நோயாளிகள்

ட்விட்டர் நிறுவனத்திற்கு ரஷ்யா அபராதம்