உள்நாடு

4 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் தனிமைப்படுத்தலில்

(UTV|கொழும்பு) – கந்தக்காடு தனிமைப்படுத்தல் மத்திய நிலையத்தில் தங்கவைக்கப்பட்டிருந்த 27 பேர் தனிமைப்படுத்தல் காலத்தினை நிறைவு செய்துகொண்டு வீடுதிரும்பியுள்ளனர.

இதேவேளை நாடு முழுவதும் 39 தனிமைப்படுத்தல் நிலையங்களில் மொத்தமாக 4,882 பேர் தனிமைப்படுத்தலுக்குட்படுத்தப்பட்டுள்ளதாக கொவிட் -19 எதிர்பாரா பரவலை தடுப்பதற்கான தேசிய செயல்பாட்டு மையத்தின் தலைவரும், பாதுகாப்பு தலைமை பிரதானியும், இராணுவத் தளபதியுமான லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்தார்.

அத்துடன் இதுவரை மொத்தமாக 5,136 நபர்கள் தனிமைப்படுத்தல் நடைமுறைகளை பூர்த்திசெய்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Related posts

கொரோனா வைரஸ் – இலங்கையில் மேலும் 8 பேர் அடையாளம்

பசிலின் இந்தியா பயணம் ஒத்திவைப்பு

க.பொ.த (சா/த) பரீட்சைக்கான விண்ணப்பக் காலம் இன்றுடன் நிறைவு