(UTV | கொவிட் 19) – நாடு திரும்ப முடியாமல் சிங்கப்பூரில் சிக்கியுள்ள இலங்கை மாணவர்கள் 180 பேரை நாட்டுக்கு மீள அழைத்து வருவதற்காக, ஸ்ரீலங்கன் விமான சேவைக்கு சொந்தமான விசேட விமானம் ஒன்று இன்று(05) காலை அந்நாட்டுக்கு பயணமாகியுள்ளது.
கட்டுநாயக்க விமான நிலையத்தில் இருந்து, யு.எல் 302 ரக விமானமே இவ்வாறு சிங்கப்பூர் பயணித்துள்ளது.
கொவிட்-19 தாக்கம் காரணமாக நாடு திரும்ப முடியாமல் இலங்கையில் சிக்கியிருந்த 10 சிங்கப்பூர் பிரஜைகள், குறித்த விமானத்தில் அழைத்துச் செல்லப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது