(UTV | கொழும்பு) – நாளை முதல் மூன்று தினங்களுக்கு அனைத்து இறைச்சி விற்பனை நிலையங்கள் மற்றும் மதுபான விற்பனை நிலையங்களை மூடப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொதுநிர்வாக உள் நாட்டலுவல்கள் மாகாண சபை மற்றும் உள்ளூராட்சிகள் அமைச்சு விடுத்துள்ள ஊடக அறிக்கை தெரிவிக்கப்பட்டுள்ளது.
2020 வெசாக் பண்டிகையை முன்னிட்டு மதுபான சாலைகள் , இறைச்சி விற்பனை நிலையங்கள், இறைச்சிக்காக விலங்குகளை உயிரிழக்கச் செய்யும் நிலையங்கள், சூதாட்ட நிலையங்கள் (ரேஸ் புக்கி), கஷினோ நிலையங்கள் , கிளப்புக்கள் ஆகிவற்றை மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
2564 ஸ்ரீ பௌத்த வருடமான 2020 ஆம் ஆண்டு மே மாதம் 7ஆம் திகதி மற்றும் 08ஆம் திகதி ஆகிய இரண்டு தினங்கள் வெசாக் தினமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதுடன், இம்முறை வெசாக் வைபவத்தை முன்னிட்டு 2020ஆம் ஆண்டு மே மாதம் 04ஆம் திகதி தொடக்கம் மே மாதம் 10 ஆம் திகதி வரையிலான காலப்பகுதி வெசாக் வாரமாக அரசாங்கத்தினால் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.