(UTV | கொழும்பு) – பல்கலைக்கழகங்களின் மீண்டு திறப்பதில் தாமதம் ஏற்படும் என பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
இம் மாதம் 11ஆம் திகதி திங்கட்கிழமை முதல் கட்டம் கட்டமாக ஆரம்பிக்கப்படும் என்று பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு முன்னர் அறிவித்திருந்தது.
இருந்த போதும் சுகாதாரத் துறையின் ஆலோசனையின்படி நிலை சீராகும் வரை மீண்டும் திறக்க முடியாது என்று ஆணைக்குழு தெரிவித்துள்ளது.