உள்நாடு

கொட்டகலையில் மதுபானசாலை உடைப்பு

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – கொட்டகலை நகரில் அமைந்துள்ள மதுபான விற்பனை நிலையமொன்று இன்று (04) அதிகாலை உடைக்கப்பட்டுள்ளது.

திம்புள்ள  – பத்தன பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மதுபானம் விற்பனை நிலையமே  நேற்றிரவு இனம் தெரியாதோரால் உடைக்கப்பட்டுள்ளது.

திருடப்பட்ட மதுபான போத்தல்களை, பெட்டியில் போட்டுக்கொண்டு மதுபான சாலைக்கு அருகில் இருந்த குறுக்கு வழியொன்றின் ஊடாக இவர்கள் தப்பிச்சென்றுள்ளனர்.

இவ்வாறு தப்பிச்செல்லும் வேளையில், அவ்வழியில் இருந்த வீடொன்றில் பொறுத்தப்பட்டிருந்த சி.சி.டீவி கமராவில் காட்சிகள் பதிவாகியுள்ளன.

வீடொன்றின் மதில் மீது ஏறி தப்பிச்செல்ல முற்படும் காட்சிகள் விளங்கினாலும், மின் விளக்கின் எதிர்திசை ஒளி காரணமாக நபர்களின் முகங்களை சரிவர அடையாளம் காணமுடியவில்லை.

மேலதிக  விசாரணையை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

Related posts

களனி பல்கலைக்கழகம் விடுத்துள்ள அறிவிப்பு

சந்தையில் சீமெந்துக்கு தட்டுப்பாடு

பாதையை மாற்றினால் பாதிப்பு தான் ஏற்படும் – ஜனாதிபதி ரணில்

editor