(UTV | கொழும்பு) -கொரோனா காரணமாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்கப்படும் ரூ.5,000 கொடுப்பனவு மே மாதத்திற்கும் வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.
குறித்த செயற்திட்டம் நாளை முதல் ஆரம்பிக்கப்படவுள்ளது.
இதேவேளை, சிரேஷ்ட பிரஜைகள், ஊனமுற்றோர், சிறுநீரக நோயாளிகளுக்கு, மார்ச் மாதம் முதல் தலா ரூ.5,000 கொடுப்பனவு வழங்க முடிவு செய்துள்ளதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.