உள்நாடு

இலங்கை போக்குவரத்து சபையின் புதிய திட்டம்

(UTV | கொழும்பு) -இலங்கை போக்குவரத்து சபை அரச மற்றும் தனியார் நிறுவனங்களுக்காக போக்குவரத்து வசதிகளை வழங்க தீர்மானித்துள்ளது.

இதற்கமைவாக அந்தந்த நிறுவனங்களுக்கு தனித்தனியாக பஸ்களை வழங்குவதற்கு நடவடிக்கை மேற்கொள்ள முடியும் என்று இலங்கை போக்குவரத்துச் சபை தெரிவித்துள்ளது.

இதேவேளை, நாளை (4)முதல் ரயில் சேவைகள் இடம்பெறவுள்ளதாக ரயில்வே திணைக்களம் அறிவித்துள்ளது.

குறித்த சேவை அத்தியாவசிய சேவைகளுக்காக வரும் பணியாளர்களுக்காக மாத்திரம் இடம்பெறவுள்ளது.

அந்த சேவையாளர்கள் குறித்த நிறுவன பிரதானியிடமிருந்து கோரிக்கை கடிதம் ஒன்று அனுப்பப்பட்டிருந்தால் மாத்திரமே ரயிலில் பயணிக்க அனுமதிக்கப்படுவர் என திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

ரயில்களில் பணிப்பதற்கான அனுமதி வழங்கப்படும் நபர்களுக்கு SMS மூலம் அறிவிக்கப்பட்டும் என திணைக்களம் தெரிவித்துள்ளது.

Related posts

கடன்களை மீளப்பெறும் போது மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை குறைக்கவும்

“EPF இனை மேலதிக வரியில் இருந்து நீக்குமாறு இன்று அறிவிக்கப்படும்”

ரிஷாத் பாதுகாப்பு முறைகளுக்கு அமைய பாராளுமன்றுக்கு [VIDEO]