உலகம்

கொரோனா சிகிச்சைக்கு புதிய மருந்து கண்டுபிடிப்பு

(UTV | கொவிட் – 19) – கொரோனா வைரஸ், கடந்த 5 மாதங்களில் உலகம் முழுக்க பரவி இதுவரை 34 இலட்சம் பேரை தொற்றியுள்ளது.

இதற்கான தடுப்பு மருந்து தயாரிப்பில் அமெரிக்கா, இங்கிலாந்து, ஜெர்மன் ஆகிய நாடுகள் முன்னணியில் உள்ளன.

இந்நிலையில் அமெரிக்க நிறுவனம் ஒன்று எபோலோவுக்காக உருவாக்கப்பட்ட ஆன்டி வைரல் மருந்தை, சில மாற்றங்களுடன் கொரோனா வைரசுக்கு எதிராக சோதனை செய்தது.

மூன்று கட்ட சோதனை முடிவில் ரெம்டெசிவர் என்ற அம்மருந்து நல்ல பலனளிப்பதாக தெரியவந்துள்ளது. இது அவசர சிகிச்சையில் உள்ள நோயாளிகளுக்கு உதவுவதாக நிபுணர்கள் கூறியுள்ளனர்.

இதனைத் தொடர்ந்து அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாகம் இதனை பெரியவர்கள் மற்றும் குழந்தைகளின் அவசர சிகிச்சைகளுக்கு பயன்படுத்த ஒப்புதல் வழங்கியுள்ளது.

Related posts

அரச மருத்துவமனையில் 111 குழந்தைகள் உயிரிழப்பு

ஷங்காய் டிஸ்னிலேண்ட் பூங்கா மீண்டும் திறப்பு

இளவரசர் வில்லியம்ஸ் : தொற்றுக்குள்ளாகியமை உறுதி