வணிகம்

இலவசமாக சேவைகளை வழங்குவதற்கு PickMe உடன் இணையும் HNB

(UTV | கொழும்பு) –COVID-19 வைரஸ் பரவும் அவதானம் காரணமாக சேவை வழங்குநர்களின் App ஊடாக தமது பாவனையாளர்களுக்கு இலவச விநியோக சேவைகளை வழங்குவதற்கு PickMe உடன் கைகோர்த்துள்ளதாக HNB அறிவித்துள்ளது.

அனைத்து HNB டெபிட் மற்றும் கிரெடிட் கார்ட் வைத்திருப்பவர்களுக்கு இந்த சேவைகளைப் பெற்றுக் கொள்ள முடிவதுடன் இந்த வசதியின் மூலம் பாவனையாளர்கள் PickMe ஊடாக பொருட்கள் மற்றும் அத்தியாவசிய பொருட்களை ஓடர் செய்கையில் உச்ச அளவு நான்கு ஓடர்களுக்காக அவர்களது முழு பற்றுச் சீட்டில் அல்லது விநியோகச் செலவில் 250 ரூபா கழிவு வழங்கப்படும்.

“COVID-19 கொள்ளைநோய் காரணமாக ஏற்பட்டுள்ள இடையூறுகளை குறைப்பதற்காக நம்பிக்கையான பாவனையாளர்களுக்கு அனைத்து ஒத்துழைப்பையும் பெற்றுக் கொடுப்பதற்கு HNBஇல் நாம் அர்ப்பணிப்புடன் உள்ளோம். முன்னெப்போதுமில்லாத பேரழிவாக உள்ளதனால் அத்தியாவசிய பொருட்கள் தொடர்பாக அவர்களது தேவைகளை வழங்கும் போது அவர்கள் அனுபவிக்கக் கூடிய அநாவசியமான பிரச்சினைகளை குறைத்துகொள்வதோடு எமது பாவனையாளர்களின் நலன் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக தேவையான அனைத்தையும் செய்வது எமக்கு அவசியமாகவுள்ளது.

இந்த கடினமான காலகட்டத்தில் இலங்கையிலுள்ளவர்களுக்கு ஒத்துழைப்பு வழங்குகையில் அவர்கள் செய்யும் செயல்களுக்காக எமது பங்காளரான PickMe க்கு நன்றிகளைத் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறோம். இவ்வாறான மிக முக்கியமான நடவடிக்கைக்கு ஒத்துழைப்பு வழங்கியமை தொடர்பாக எமது வங்கி மிக பெருமையடைகிறது.’ என வாடிக்கையாளர் வங்கி நடவடிக்கைகள் மற்றும் சிறிய மற்றும் நடுத்தர அளவிலான வங்கி நடவடிக்கைகள் தொடர்பான பிரதி பொதுமுகாமையாளர் சஞ்ஜேய் விஜேமான்ன தெரிவித்துள்ளார்.

PickMe App ஊடாக ஓடர்களை செய்து தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதேசங்களிலுள்ள பாவனையாளர்களுக்கு பெற்றுக் கொடுக்க முடிவதுடன் நாடுமுழுவதிலும் விநியோக சேவையை வழங்குவதற்காக இந்த வசதி உடனடியாக அமுல்படுத்தப்பட்டுள்ளது.

இந்த கூட்டு முயற்சியானது COVID-19 நெருக்கடிக்கு மத்தியில் சீராக பயணிப்பதற்கு உதவுவதற்காக கார்ட்களை வைத்திருப்போர் பணம் செலுத்துவது தொடர்பாக HNBஇனால் ஆரம்பிக்கப்பட்டுள்ள விசேட அனுசரணை வேலைத் திட்டத்தின் ஒரு அங்கமாகும்.

மேலதிக தகவல்கள் மற்றும் ஒத்துழைப்பு குறித்து ஃபேஸ்புக், டுவிட்டர் அல்லது இன்ஸ்டகிராம், www.hnb.net இணையத்தளத்திற்குச் சென்று HNB உடன் தொடர்பு கொள்ளுங்கள், இல்லாவிட்டால் 0112-462462 ஊடாக HNBக்கு அழையுங்கள்.

Related posts

தேயிலை ஏற்றுமதி அதிகரித்துள்ளது

புகழ்பெற்ற இசைக்கலைஞர்களுடன் கொழும்பில் Melodies of Folk 2018 நிகழ்வு ஏற்பாடு

ஏற்றுமதிப் பயிர்களை ஊக்குவிக்கும் வேலைத்திட்டம்