(UTV | கொழும்பு) – நாட்டில் நிலவும் அசாதாரண சூழ்நிலையைக் கருத்திற்கொண்டு, வாழ்வாதாரத்தை இழந்துள்ள குடும்பங்களுக்கு வழங்கப்பட்ட 5,000 ரூபாய் கொடுப்பனவு தொடர்பில் கிடைக்கப்பெற்ற மேன்முறையீடுகளை தற்போது பரிசீலித்து வருவதாக, சமுர்த்தி சேவை பணிப்பாளர் நாயகம் பந்துல திலக்கசிறி தெரிவித்துள்ளார்.
குறித்த கொடுப்பனவு கிடைக்கப் பெறாதவர்களுக்கு அதனை பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.