(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – கொழும்பு மாவட்டத்தில் மட்டும் 21 இடங்கள் முற்றாக முடக்கப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டுள்ளது.
கொழும்பு 14, நாகலகம் வீதி, கொழும்பு 13 கொட்டாஞ்சேனை வீதியின் 64 ஆம் தோட்டம், கொழும்பு 12 பண்டாரநாயக்க மாவத்தை, கொழும்பு 11 குணசிங்கபுர, வாழைத்தோட்டம் பகுதிகள், பம்பலபிட்டி – பிரிஷ்டா பிளேஸ், மருதானையின் இமாமுல் அரூஸ் மாவத்தை, ஆர்னோல்ட் ரத்நாயக்க மாவத்தை, நாரஹேன்பிட்டி தாபரே மாவத்தை, கொழும்பு 7, – சுதந்திர சதுக்கம் – 60 ஆம் தோட்டம், ஹெவலொக் லேன், ஒருகொடவத்த – மஜீத் பிளேஸ், மீத்தோட்டமுல்லை – வெடுகொடவத்தை, பெரேரா மாவத்தை பகுதிகள், வெல்லம்பிட்டி – வெலேவத்தை, மஹபுத்துகமுவ – நவாரவத்தை, மிரிஹானை – விமலவத்த வீதி, தெஹிவளை – றப்பர் தோட்ட வீதி, அருணாலோக்க மாவத்தை, பிலியந்தலை பகுதியின் கிராமோதய மாவத்தை, பண்னிபிட்டிய – பலனவத்த ஆகிய 21 இடங்களே இவ்வாறு முடக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில், கொழும்புக்குள் கொரோனா வைரஸ் தொற்று பரவலை தடுக்கும் நோக்கில் தொடர்ந்தும் ஊரடங்கு அமுலில் உள்ள நிலையில், தொடர்ச்சியாக கொரோனா தொற்றாளர்களை கண்டறிய பி.சி.ஆர். பரிசோதனைகள் மக்கள் செறிந்து வாழும் கொழும்பு – தோட்டங்களில் ஆரம்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கொரோனா வைரஸ் காரணமாக கொழும்பு மாவட்டத்தில் மட்டும் 155 தொற்றாளர்கள் அடையாளங்காணப்படுள்ளனர்.