உள்நாடு

உயர்தர மற்றும் புலமைப்பரிசில் பரீட்சைகள் தொடர்பான அறிவிப்பு

(UTV|கொழும்பு) -2020 ஆண்டுக்கான க.பொ.த. உயர்தரப் பரீட்சைகள் மற்றும் புலமைப்பரிசில் பரீட்சை ஓகஸ்ட் மாதம் திட்டமிடப்பட்டபடி நடைபெறும் என்று கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

இந்நிலையில் உயர்தர பரீட்சைக்கு தோற்றுவதற்காக 367,000 விண்ணப்பங்கள் கிடைக்கப்பெற்றுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்தவகையில் புலமைப்பரிசில் பரீட்சைக்கு தோற்றுவதற்காக 338,000 விண்ணப்பங்கள் கிடைக்கப்பெற்றுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, 2019 ஆண்டுக்கான க.பொ.த. சாதாரண தரப் பரீட்சையின் முடிவுகள் இந்த வாரம் வெளியிடப்படும் என்று பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சனத் பூஜித தெரிவித்துள்ளார்.

Related posts

அருட்தந்தை ஏர்னஸ்ட் இயற்கை எய்தினார்

பெரிய வெங்காயத்திற்கான விசேட பொருட்கள் வரியை குறைக்க நடவடிக்கை

editor

வெலிகடை சிறைச்சாலை : எழுவருக்கு கொரோனா