உள்நாடுவணிகம்

இன்று முதல் பேலியகொடை மீன் சந்தை திறப்பு

(UTV | கொழும்பு) –பேலியகொடை மீன் சந்தை இன்று(25) முதல் மொத்த வியாபாரிகளுக்காக திறக்கப்படவுள்ளதாக பேலியகொடை மீன் விற்பனையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

எனினும் மீன் சந்தையில் சில்லறை நடவடிக்கைகள் இன்னும் ஆரம்பிக்கப்படவில்லை.

மொத்த வர்த்தகத்தின் போது சுகாதார வழிகாட்டுதல்களை அவசியம் கடைப்பிடிக்குமாறும் விற்பனையாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

கொரோனா தொற்றுக்குள்ளான நபர் ஒருவர் பேலியாகொட மீன் சந்தைக்கு பயணித்துள்ளார் என்பது கண்டறியப்பட்ட நிலையிலேயே கடற்றொழில் நீரியல் வளங்கள் அபிவிருத்தி அமைச்சின் ஆலோசனையின் கீழ் 22 ஆம் திகதி முதல் பேலியகொட மீன் சந்தை தற்காலிகமாக மூடப்பட்டது.

பின்னர், பேலியகொடை மீன் விற்பனை நிலையத்தில் இருந்து பி.சி.ஆர் பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்பட்ட 529 பேரில் எவருக்கும் கொரோனா தொற்று இல்லை என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்திய நிபுணர் அனில் ஜாசிங்க தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts

இறக்குமதியை கட்டுபடுத்துமாறு ஜனாதிபதி உத்தரவு

புதுமைகளின் மூலம் தனது பாவனையாளர்களை ஆச்சரியப்படுத்தும் vivo

மீண்டும் தேர்தல் களத்திலிருந்து வௌியேறினார் சாள்ஸ் நிர்மலநாதன்

editor