(UTV|கொழும்பு) – இந்தியாவில் இருந்த 101 இலங்கை மாணவர்கள் சற்றுமுன்னர் நாடு திரும்பியுள்ளனர்.
இந்தியாவின் அமிர்தசரஸில் இருந்து இந்த மாணவர்களை அழைத்துவருவதற்காக சென்ற சிறப்பு இலங்கை விமான சேவைக்கு சொந்தமான விமானம் தற்போது இலங்கை வந்தடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.